கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் மிக மிக அவதானமாக இருங்கள் வெள்ள நிலைமை அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மோசமான காலநிலையால் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ரண்தம்பே மற்றும் மஹியங்கனை 132 kV மின்சார விநியோக மார்க்கம் பாதிப்பினால் மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு துணை மின் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அநுராதபுரம் மற்றும் நுவரெலியா ஆகிய நகரங்களை தற்போது தரைவழியாக அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 206 வீதிகள் தடைப்பட்டுள்ளன, 10 பாலங்கள் சேதமடைந்துள்ளன என வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
அநுராதபுரம் மற்றும் நுவரெலியா ஆகிய நகரங்களை தற்போது தரைவழியாக அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 206 வீதிகள் தடைப்பட்டுள்ளன, 10 பாலங்கள் சேதமடைந்துள்ளன என வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

நாவலபிட்டி தொலஸ்பாகை பரகல மேரிவல தோட்டத்தில் மண்ணுக்குள் புதைந்த லயன் குடியிருப்பு காணாமல் போனாவர்கள் தொடர்பில் தகவல் இல்லை.

நாயாறு பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிப்பு.
வவுனியாவில் நீரில் அடித்து செல்லப்பட்டு கார்; இருவர் மரணம்.
இகினியாகலவிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம், பொல்வத்த சந்தி பாலத்திற்கு அருகில், சேனநாயக்க சமுத்திரத்திலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான இடது கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் விமலசுரேந்திர அணைக்கட்டு அருகே உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.