ஐஸூடன் எழுவர் காத்தான்குடியில் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி, புதிய காத்தான்குடி, பாலமுனை ,பூநொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வைத்து ஐஸ் போதை பொருட்களுடன் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே ஐஸ் போதை பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2,520 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது .

சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்