கசிப்புடன் கைது

சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் 15 க்கு மேற்பட்ட பொலிஸார் இனைந்து சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் இடங்களை தேடி சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் இதன்போது மாவடிவேம்பு பகுதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் வறள் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்ட 40 லிட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டது. 

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வீட்டின் உரிமையாளர்களான ஆண் , பெண் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இடத்திற்கு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன் வருகை தந்து சட்டவிரோத கசிப்பு விற்பனை செய்யும் இடங்களை அடையாளப்படுத்தியதுடன். குறித்த இடங்களில் சோதனை செய்யப்பட்டு கசிப்பு விற்பனை இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக கசிப்பு விற்பனை மற்றும் உற்பத்தியினால் மாவடிவேம்பு பகுதியில் உள்ள மக்கள் மற்றும் குடும்பங்கள், பாடசாலை பிள்ளைகள் பாதிக்கப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

கசிப்பு தொடர்பான பிரச்சினை இருக்கும் இடங்களுக்கு ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரனின் வேண்டுகோளுக்கினங்க இரண்டு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதேவேளை சித்தாண்டி சமூக செயற்பாட்டு இளைஞர்களும் குறித்த கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தொடர்ச்சியாக பொலிஸாருடன் இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன புதன்கிழமை (11) கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் தேவிபுரம்   பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

அங்கு கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11,69,500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில்,  கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் பொலிஸாரின் வருகையை உணர்ந்து தப்பியோடியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

 சந்தேக நபர்களை தேடி வருவதாக தெரிவித்த புதுக்குடியிருப்பு பொலிஸார்  மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு முச்சக்கரவண்டியில் சூட்சகமாக மறைத்து வைத்து கசிப்பு கடத்திய ஒருவரை ஏறாவூர் சவுக்கடி பகுதியில் வைத்து புதன்கிழமை (05) அன்று மாலை கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்துள்ளதுடன் 20 லீற்றர் கசிப்பை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர வின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி. மேனன் தலைமையிலான பொலிஸார் சம்பவ தினமான புதன்கிழமை (05) அன்று ஏறாவூர் சவுக்கடி வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்

இதன் போது ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு கசிப்பு கடத்தி சென்ற  முச்சக்கர வண்டியில்  நிறுத்தி சோதனையிட்ட போது  முச்சக்கர வண்டிக்குள் பொருத்தப்பட்ட ஒலிவாங்கி பெட்டி (பொக்ஸ்)  உள்ளே சூட்சகமாக  மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 போத்தல் கசிப்பை மீட்டதுடன் முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.