மூன்று, நான்கு அடிக்கு மேலாக பாதையில் வெள்ளம் சென்று கொண்டிருந்தபோது சாரதி பாலத்தை கடக்க பஸ்ஸை செலுத்தியுள்ளார். அப்பாதையில் நின்ற கிராமவாசிகளின் எச்சரிக்கையையும் கருத்தில் கொள்ளவில்லை.
பல பயணிகளும் பஸ்சை செலுத்த வேண்டாம் என கூக்குரலிட்டதையும் கருத்தில் கொள்ளாது சாரதி செலுத்தியதும் திடீரென பாலத்துக்கு குறுக்கே வெள்ளநீர் மட்டம் அதிகரித்தது. இதனால் பஸ் நகர முடியாமல் அவ்விடத்திலேயே நின்றுவிட்டது. மக்கள் செய்வதறியாது பரிதவித்தனர்.
நேரம் செல்லச் செல்ல நீர்மட்டம் உயர்ந்து கொண்டே சென்று பஸ்ஸின் இருக்கைகளுக்கு மேலாகவும் நீர் உயர்ந்து சென்றது.
மக்கள் கூச்சலிட்டு கொண்டு பலருக்கும் அழைப்பை ஏற்படுத்த Navy மற்றும் ராணுவத்தை சேர்ந்த சிலர் உடனடியாக களத்துக்கு விரைந்தனர்.
ஒரே துடுப்பு படகின் மூலம் அவர்கள் எல்லோரையும் வெளியேற்ற முடியாத நிலை.
நீர்மட்டம் உயர்ந்துகொண்டே சென்றது. ஆண்கள், பெண்கள் என பயணிகள் அனைவரும் பஸ்ஸின் கூரைக்கு மேலே ஏற்றப்பட்டனர்.
கயிறுகளின் மூலம் பஸ்ஸை அருகில் உள்ள கட்டடத்தில் கட்டி பயணிகள் அனைவரையும் அருகில் உள்ள கட்டிடத்தின் கூரையில் ஒவ்வொருவராக ஏற்றப்பட்டனர்.
அவர்கள் ஏற்றப்பட்டு சிறிது நேரத்திலேயே பஸ் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
கூரையானது அஸ்பஸ்டஸ் சீட்டினால் (Asbestos Sheet) அமையப்பெற்றது. 70 பயணிகளும் அந்த ஒரே கூரையில் ஏற்றப்பட்டார்கள்.
எங்கு சூழவும் ஒரே வெள்ள மயம். நீரில் இளகிய Sheet உடைந்தால் எல்லோருமே வெள்ளத்தில் மூழ்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை. யாரும் அசையாமல் அந்த சீட்டிலே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
வேறு இயந்திர படகுகளை அந்த இடத்துக்கு உடனடியாக கொண்டு வர முடியாத நிலையில் மீட்பு படையினரும் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.
அந்த இடத்துக்கு மீட்புக்காக ஹெலிகாப்டர் கொண்டுவரப்பட்டது. Helicopter கூரைக்கு அருகில் வரும்போது Sheet கூரை Vibrateஆக தொடங்கியது. அப்போது அதிலிருந்த மூவர் கீழே விழுந்தனர்.
தெய்வாதீனமாக ஒருவர் மரத்தில் சிக்க அவரை அருகில் இருந்த மக்கள் பிடிக்க, அடுத்த இதுவரையும் கடல் படையினர் காப்பாற்றி மீண்டும் கூரையில் ஏற்றினர். இதனால் விமான மூலமாகவும் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையும் தடைப்பட்டது.
நேரம் செல்லச் செல்ல எல்லோருக்கும் மரண பயம் தொற்றிக் கொண்டது. அழுவதும் உறவினர்களுக்கு அழைப்புகளை எடுப்பதுமாக நேரங்கள் கடந்தன.
நள்ளிரவு தாண்டியும் இந்தப் போராட்டம் தொடங்கியது. விடியும் வரை காத்திருக்க வேண்டும் என்பதற்காக நீர், உணவு மற்றும் ஏனைய உடல் உபாதைகளை கட்டுப்படுத்திக்கொண்டு விடிய விடிய அந்த மழைக்குள் அசையாமல் மக்கள் அதே கூரையில் உட்கார்ந்து இருந்தார்கள்.
இரவு முழுக்க அவர்களை மீட்பதற்கான பல முயற்சிகளில் படையினரும், ஊடகங்களும், போலீசாரம் ஈடுபட்டனர்.
இறுதியாக அதிகாலையில் இயந்திர படகுகள் கொண்டுவரப்பட்டு குழுக்களாக அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த வெள்ள அனர்த்தத்தின் ஒரு சிறு துளி மாத்திரமே.
@ Ziyad Aia