கழிவறைகளால் விமான பயணிகள் பதற்றம்

சரே, மேற்கு சசெக்ஸ், மற்றும் தெற்கு லண்டன் பகுதிகளில் சேவை வழங்கும் SES Water நிறுவனத்தின் ‘போப் பீச்’ (Bough Beech) நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே இந்த நீர் விநியோகத் தட்டுப்பாட்டிற்குக் காரணமாகும்.

விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், “ஹோர்லி (Horley) பகுதியில் ஏற்பட்டுள்ள நீர்ப் பிரச்சினை காரணமாக விமான நிலையத்தில் இன்று இடையூறு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினை இரு முனையங்களையும் (Terminals) பாதித்துள்ளது. இருப்பினும், விமான இயக்கத்தில் இதுவரை எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் அவசர கால ஏற்பாடாகப் போத்தல்களில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் விமான நிலையம் தெரிவித்துள்ளது.சமூக வலைத்தளங்களில் பயணிகள் தங்கள் கடும் எதிர்ப்புகளையும் ஏமாற்றங்களையும் பதிவிட்டுள்ளனர்:

ஜூலியா ஹார்ட்லி-பிரிவர் (Julia Hartley-Brewer): “நீங்கள் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்வதாக இருந்தால், அங்கு ஓடும் நீர் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். விமான நிலையம் இதுகுறித்து பயணிகளுக்கு எந்தவொரு பொது அறிவிப்பையும் வெளியிடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயணியின் கருத்து: “விமான நிலையத்தில் உணவகங்கள், மதுபானக் கூடங்கள் (Bars) மற்றும் இலவசக் குடிநீர் கூட இல்லை. எங்களால் ஒரு கப் காபி கூட அருந்த முடியவில்லை. கேட்விக் மிக மோசமாகச் செயல்படுகிறது.” எனிறா்