சீனா சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி

தனது விஜயத்தின் போது, ​​பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீன அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பெய்ஜிங்கில் “ஒரு எதிர்காலம்: பெண்களுக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சி” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும்   பிரதமர் லி கெகியாங் ஆகியோருடன் பல இருதரப்பு கலந்துரையாடல்களிலும் பங்கேற்பார்.