செவ்வந்திக்கு நூல் கொடுத்த பெண் சட்டத்தரணிக்கு தடுப்புக்காவல்

கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்காக வந்த இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை இந்தச் சட்டத்தரணியே வழங்கியுள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இந்தச் சட்டத்தரணி நேற்று (28) இரவு கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.