தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு விலை நிர்ணய சுதந்திரம்

தற்போதைய விலை நிர்ணயக் கட்டமைப்பின் கீழ் கடுமையான நட்டத்தை எதிர்கொள்வதாகவும், இதனால் டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் பல தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் செயற்படும் லங்கா ஐ.ஓ.சி (LIOC), சீனொபெக் (Sinopec) மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) ஆகிய மூன்று தனியார் எரிபொருள் நிறுவனங்களும், உலகளாவிய எண்ணெய் விலையேற்றம் மற்றும் அரசாங்கத்தின் டீசல் மானிய நீக்கம் காரணமாக ஏற்பட்ட கடுமையான நிதி இழப்புக்கள் காரணமாகத் தங்களது டீசல் விநியோகத்தை சுமார் 50 வீதத்தால் கட்டுப்படுத்தியுள்ளன.

சாத்தியமான எரிபொருள் நிரப்பு நிலைய மூடல் விவகாரங்களைத் தவிர்க்கும் பொருட்டு, உடனடி விலை திருத்தமொன்றைக் கோரி குறித்த நிறுவனங்கள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இதற்கிடையில், எரிபொருள் இறக்குமதிச் செலவுகளை அடிப்படையாகக் கொண்டு செப்டம்பர் மாத இறுதியிலும் அரசாங்கம் தனது மாதாந்திர எரிபொருள் விலை மீளாய்வை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு மோதலானது குறைந்த விலைக் காலப்பகுதிக்குப் பின்னர் உலகளாவிய எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த காலத்தில் நுகர்வோருக்குச் சில சேமிப்புப் பலன்களை வழங்க முடிந்த போதிலும், தற்போது எரிபொருள் விலைகள் ஏற்கனவே மிகக் அதிகமாக உள்ளதாகவும், மேலும் விலை அதிகரிப்பை நுகர்வோர் தாங்கிக் கொள்ள முடியுமா என்பது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “இறக்குமதிச் செலவுகளை அடிப்படையாகக் கொண்டு நாம் எரிபொருள் விலைகளை மீளாய்வு செய்வதுடன், செப்டம்பர் மாத இறுதியில் அடுத்த மீளாய்வை நடத்துவோம் என எதிர்பார்க்கிறோம். எவ்வாறாயினும், எரிபொருள் விலைகள் ஏற்கனவே கணிசமான அளவில் அதிகமாக உள்ளன.

மேலும் விலை அதிகரிப்புகளை நுகர்வோர் தாங்க முடியுமா என்பது குறித்து அரசு விவாதித்து வருகிறது. தற்போதைய விலை அமைப்பின் கீழ் பல தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களால் நட்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது எனக் கூறியுள்ளதால், டீசல் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, குறிப்பிட்ட உச்ச மற்றும் குறைந்த வரம்பிற்குள் இந்நிறுவனங்கள் விலைகளை நிர்ணயிக்க அனுமதிக்க சட்டப்பூர்வ விருப்பங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.