’’விவசாயிகளை வருங்கால மணமகன்களாகக் குறிப்பிடுவதில்லை’’

பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், தற்போது செய்தித்தாள்களில் பெண்களுக்குப் பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களைத் தேடும் திருமண விளம்பரங்கள் வருகின்றன, ஆனால் விவசாயிகளுக்கு அல்ல என்று சுட்டிக்காட்டினார்.

“எனக்கு 61 வயது. நான் திருமண விளம்பரங்களைப் பின்பற்றுகிறேன். ஒவ்வொரு விளம்பரமும் தகுதியான அல்லது திறமையான தொழிலாளியைத் தேடுகிறது. எதிலும் விவசாயிகளை வருங்கால மணமகன்களாகக் குறிப்பிடுவதில்லை. இதுதான் இலங்கையில் விவசாய சமூகத்தின் நிலை” என்று அவர் கூறினார். 

விவசாயியை மணமகனாகத் தேடி திருமண விளம்பரம் வெளியிடப்படும் அளவுக்கு விவசாய சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வலுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று அமைச்சர் லால் காந்த கூறினார்.