34 வெற்றி, 38 தோல்வி : இலங்கை அணிக்கு பேரிடி

இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று (28) நடைபெறவுள்ள போட்டியே, தாம் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றும் கடைசிப் போட்டியாகும். இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே அப்பதவியிலிருந்து விலகுவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜயசூரியவின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலத்தில், இலங்கை அணி அனைத்து வகையான போட்டிகளிலும் 74 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 34 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 

அத்துடன், 2 போட்டிகள் எவ்வித முடிவுகளுமின்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இன்றைய SL vs Pak போட்டிக்குப் பிறகு Sanath Jayasuriya அவர்கள் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீழ்ந்து கிடந்த அணியை மீண்டும் எழுப்ப வேண்டும் என்ற உறுதியுடன் அவர் பொறுப்பேற்றார். வீரர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, அணிக் கட்டமைப்பு, உடற்பயிற்சி ஒழுங்கு — பல துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்தார்.

ஒரு “Legend” என்ற பெயருக்கு ஏற்றவாறு, தேசத்தின் கிரிக்கெட்டுக்காக மனதார உழைத்தார். ஆனால்… அணிக்குள் ஒற்றுமையின்மை, விடாப்பிடி திமிர், அடாவடித்தனம், அணிக்குள் அணிசேர்த்தல் போன்ற செயல்பாடுகள் ஒரு பயிற்றுவிப்பாளரின் முயற்சிகளை பலவீனப்படுத்தினால் அதன் விளைவாக தோல்வி முகத்துடன் விலக வேண்டிய நிலை உருவாகிறது. சனத் தோல்வியடைந்தவர் அல்ல. அவர் முயற்சித்தவர். மாற்றத்தை தொடங்கியவர்.