மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.
Month: June 2025
ஈரான் விமான நிலையங்களை தாக்கி அழித்தது இஸ்ரேல்
மக்காச்சோள விற்பனையில் மோசடி
கடும் பனி காரணமாக போக்குவரத்து பாதிப்பு
மத்திய மலைநாட்டில் திங்கட்கிழமை (23) அதிகாலை முதல் நிலவும் கடும் பனி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹட்டன்-நுவரெலியா, ஹட்டன்-கொழும்பு மற்றும் அதை ஆண்டிய வீதிகளில் இவ்வாறு கடும் பனி நிலவுகிறது. குறித்த வீதிகளில் வாகனம் செலுத்தும் போது கவனமாக வாகனத்தை செலுத்துமாறு ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
அ’புர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை
அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன், வெளிநாட்டுப் பயணத் தடையையும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தால் திங்கட்கிழமை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஓகஸ்ட் 4 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
“ எரிபொருள் விலையில் பெரிய அதிகரிப்பு, பற்றாக்குறை இருக்காது”
இஸ்ரேல் மீது விடாப்பிடியாக தாக்கும் ஈரான்: இடைவிடாது ஒலிக்கும் சைரன்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘போரை முடிவுக்குக் கொண்டுவருவோம்’ என்ற எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் புதிதாக ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் பல நகரங்களில் ஓயாமல் சைரன் சத்தங்கள் ஒலிக்கின்றன. ஜெருசலேமில் பயங்கர குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன என ஊடகங்கள் தெரிவித்தன.
மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்களுக்கு ஈரான் குறி
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்களை அமெரிக்க விமானப் படை தாக்கியது. ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் அல்லது ராணுவ வீரர்களும் இப்போது ஈரானின் இலக்காக மாறியுள்ளது என ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
”அவர் GMOA உறுப்பினர் அல்ல”
“எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது” : போப் லியோ
போர் மூலம் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்று போப் லியோ கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து போப் லியோ கூறியதாக வத்திக்கான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “மத்திய கிழக்கில் இருந்து, குறிப்பாக ஈரானிலிருந்து தொடர்ந்து கவலையளிக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. முன் எப்போதையும் விட, மனிதகுலம் அமைதிக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.