மட்டக்களப்பு போராளிகளை உலகம் முழுக்க சென்று விமர்சனம் செய்ததின் விளைவுதான் பரராசசிங்கம் கொலை. யோசப் பரராசசிங்கம் மட்டுமல்ல நாம் பிரிந்த பிற்பாடு இந்த கலாச்சாரத்தை தொடக்கியவர்வள் புலிகள். ராஜன் சத்தியமூர்தியை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இரக்கம் இல்லாமல் சுட்டு கொன்றார்கள். அவரின் முகம் சாப்பாட்டு பிளேட்டில் சாய்ந்து கிடந்தது. இதை போல் எதுவித தவறும் செய்யாத அப்பாவி கிங்ஸ்லி ராசநாயகத்தை புலிகள் கொன்றார்கள். இதற்கெல்லாம் யார் அஞ்சலி செலுத்தப் போகின்றீர்கள்?
அன்று யோசப் பரராசசிங்கம் அமைதியாக இருந்திருந்தால் இன்று உயிர் வாழ்திருக்கலாம். புலிகள் உலகத்தையே வென்று விடுவார்கள் என்ற நம்பிக்கையில் பிரிந்த, மட்டக்களப்பு போராளிகளை உலகம் முளுக்க சென்று விமர்சனம் செய்ததின் விழைவுதான், பரராசசிங்கம் கொலை. இன்று அவரிற்கா அஞ்சலி செய்பவர்களெல்லாம் அன்று இரண்டு பக்கமும் வாலைகாட்டி, தலைநகரில் தலைமறைவாக ஒழிந்துகொண்டிருந்தவர்கள் தான், இன்று என்ன இரக்கத்தோட கவிதை, அஞ்சலி, இரங்கலுரை பாருங்கள்.
உங்களை ஏமாற்றுவதற்கு எப்படியெல்லாம் முதலைக்கண்ணீர் வடிக்கின்றார்கள். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கின்றது யோசப் பரராசசிங்கமும், சுகுணம் யோசப்பும் வேலை எடுத்து தருவதாககூறி, ஒரு இலட்சம் காசு மக்களிடம் வாங்கியபோது பொட்டனின் அணியினர் அவரை அழைத்து இதுபோல் செய்தால் உன்னை மண்டையில் வைப்போம்மென்று மிரட்டியவர்கள் தான் புலிகள். இன்று பாருங்கள் எவ்வளவு பாசமழைபொளிகின்றார்கள் யோசப்பரராசசிங்த்தின் மறைவிற்கு.
– விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தன் முகநூலில்-