ஜனாதிபதிதேர்தல் களம் தொலைந்துபோகும் தேசிய இனப் பிரச்சனையும்,தேசியநல்லிணக்கமும்.

(வி.சிவலிங்கம்)

எதிர்வரும் 16 -11- 2019 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய இனப் பிரச்சனைஎன்பதுகாவுகொள்ளப்பட்டுள்ளது. தேசியசிறுபான்மை இனங்களின் வாக்குகள் இல்லாமலேயே ஜனாதிபதிபதவியைக் கைப்பற்றமுடியும் என்றநம்பிக்கைகள் வளர்ந்துள்ளன. பல்லினங்கள் வாழும் பன்மைத்துவசமூகத்தில் இன அடிப்படையிலானபெரும்பான்மையினரின் வாக்குகளைமட்டும் பெற்றுஅதிகாரத்தைக் கைப்பற்றுவது ஜனநாயகஅரசியலைக் கேள்விக்குட்படுத்துகிறது. ஒருகாலத்தில் தேர்தல்களில் தேசிய இனப் பிரச்சனைக்கானதீர்வுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் இன்றியமையாதஅம்சமாக இருக்கும். போர்க்காலத்தில்கூடதேர்தல் வாக்குறுதிகளின் நிகழ்ச்சிநிரலில் தேசிய இனப் பிரச்சனைமுதலாவது இடத்தைப் பிடித்திருந்தது. தற்போதுமுற்றாகவேகாணாமல் போயுள்ளது.