மரக்கறிகளை உற்பத்திச் செய்வதற்கான செலவுகள் அதிகரித்துச் செல்வதால், மரக்கறி பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் விவசாயம் செய்வதில் இருந்து விலகியுள்ளனர். இதனால், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் கடுமையான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.