சலுகை விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். சர்வதேச நீதி வரையறைக்கு உட்பட்டு ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.