2008 மற்றும் 2021 க்கு இடையில் 22 வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த சீனா 240 பில்லியன் டொலரை செலவிட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது. அந்நாடுகளில் பல சீனாவிடம் பல்வேறு திட்டங்களுக்காக கடன் பெற்றுள்ளதாகவும், அவற்றை திருப்பி செலுத்துவதில் தற்போது கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.