மீண்டும் ஆட்சி மாற்றத்துக்கான தேவை எழுந்துள்ளது!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி அபாயகரமான ஒரு நிலையை எட்டியுள்ளதாக சகல பொருளாதார நிபுணர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்னொரு பக்கத்தில் ‘வற்’ வரி எனப்படும் பெறுமதி சேர் வரியை (Value Added Tax) அரசாங்கம் அதிகரித்துள்ளது. இவற்றின்; விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதாக உணவு நிலையங்களின் உரிமையாளர்களும், பேக்கரி உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர். போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கவுள்ளன.