பிரான்ஸில் லைக்கா நிறுவனத்தின் மீது பொலிஸ் நடவடிக்கை. பெருமளவு கறுப்புப் பணம் கைப்பற்றப் பட்டது. 130000 யூரோ ரொக்கப் பணமாகவும், 850000 யூரோ வங்கிக் கணக்குகளில் இருந்தும் பறிமுதல் செய்யப் பட்டது. இது தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களில் லைக்காவின் பிரான்ஸ் நிர்வாகி Alain Jochimek உம் ஒருவர் எனத் தெரிய வருகின்றது. இவர் ஒரு யூதர். பிரான்ஸில் சியோனிச அமைப்பொன்றை நடத்தி வருகின்றார்.
லைக்கா நிறுவனம் பிரிட்டனில் பெருந்தொகைப் பணத்தை வரி ஏய்ப்புச் செய்து வந்துள்ளது. பிரிட்டனில் மதிப்புக்கூட்டு வரி (VAT) கட்டுவதில்லை. அந்த நிறுவனத்தின் சொந்த கணக்காளர்களுக்கும் சரியான வருமானம் தெரியாது.
லைக்கா நிறுவனத்தின் சிக்கலான காப்பரேட் அமைப்பு காரணமாக, சிறிய போலி நிறுவனங்கள் ஊடாக நடக்கும் பணப் பரிமாற்றம் கணக்கில் வருவதில்லை. கணக்கில் வராத பணம் வரியில்லா சொர்க்கமான மடேய்ரா தீவுக்கு கடத்தப் படுகின்றது.
லைக்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அல்லிராஜா சுபாஸ்கரன், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரூனுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தார். கென்சர்வேட்டிவ் கட்சிக்கு நிதியளித்துள்ளார். இதனால் டேவிட் கமெரூன் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டியிருந்தது.
அதே மாதிரி லைக்கா இலங்கையில் முதலிடுவதற்கு , அல்லிராஜா சுபாஸ்கரன் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவுக்கு லஞ்சம் கொடுத்து இருவரும் சர்ச்சைக்குள் மாட்டிக் கொண்டனர்.
(Tharmalingam Kalaiyarasan)