பற்குணம் A.F.C (பகுதி 63 )

இனக்கலவரம் முடிந்தபின் அகதிகளாக இடம்பெயர்ந்த அரசாங்க பணியாளர்கள் கடமையை உறுதி செய்யும் விதமாக எல்லோரும் யாழ்ப்பாண கச்சேரியில் கையெழுத்து போட்டு வந்தார்கள்.பற்குணமும் அவ்வாறே செய்தார்.
இந்நிலையில் பற்குணத்துக்கு இரண்டு சிக்கல்கள் இருந்தன.ஒன்று வழக்கு.இரண்டாவது மீண்டும் அதே இடத்தில் அல்லது தெற்கில் வேலை செய்யமுடியாது.அரசியல்வாதிகளோடு இணந்து செயற்படாததால் எதுவும் இலகுவில் சாத்தியம் இல்லை.
இந்நிலையில் மூதூர் தங்கத்துரை பற்குணம் தப்பிய செய்தி அறிந்து மகிழந்தார்.பின்னர் அமிர்தலிங்கத்திடம் எப்படியாவது பற்குணத்தை யாழ்ப்பாணம் மாற்றவேண்டும் என கோரிக்கையை வைத்தார்.பொதுத்தேர்தலில் தங்கத்துரை நிராகரிக்கப்பட்டதால் அவரின் இக் கோரிக்கைக்கு அமிர்தலிங்கம் செவிசாய்த்தார்.பின்னர் இது தொடர்பாக சாவகச்சேரி பா.உ வி.என்.நவரத்திரத்திடமும் அமிர்தலிங்கம் கதைத்தார்.அவரகள் இருவருக்கும் பற்குணம் யாழ்ப்பாணத்தில் பணியாற்ற வருவதில் ஆட்சேபனை இருக்கவில்லை.

இந்த தகவலை என் சகோதரர் இரத்தினசிங்கம் மூலமாக நவரத்தினம் தெரிவித்தார்.(இரத்தினசிங்கம் ஒருவரே எங்கள் குடும்பத்தில் கூட்டணியை ஆதரித்தவர்.இன்றும் ரி.என் .ஏ இன பிரதேசபை உறுப்பினர்)இந்த தகவல் பற்குணத்திடம் தெரிவிக்கப்பட்டது .அப்போது பற்குணம் தான் யாழ்ப்பாணம் வந்தால் கூட்டுறவு ஆணையாளராகவே வர விரும்புவதாக கூறினார்.இந்த தகவலை இரத்தினசிங்கம் பலருக்கும் தெரிவுத்தார்.

இடையே நவரத்தினம் அமிர்தலிங்கம் ஆகியோர் பற்குணத்தை சந்திக்க விரும்புவதாக தகவல் கிடைத்தது.இந்த சூழ்நிலையில் பற்குணம் கொழும்பு சென்றுவிட்டார்.எனவே அவர் இராமகிருஷ்ண மிசனில் தங்கும் தகவலும் கொடுக்கப்பட்டது.அவரகள் அங்கே பார்க்க சென்றபோது பற்குணம் இல்லை.இந்த தகவலை நவரத்தினம் சகோதரர் இரத்தினசிங்கத்திடம் தெரிவித்து இனி எங்கே சந்திக்கலாம் என வினாவினார்.

இதை அறிந்த பற்குணம் அவர்கள் மக்கள் பிரதிநிதிகள்.அவரகள் என்னை வந்து பார்ப்பது நாகரீகம் அல்ல.நான் அவர்களைச் எங்கே வந்து சந்திப்பது என்ற தகவலைக் கேட்டு வரச் சொன்னார்.

இந்த தகவலை இரத்தினசிங்கம் நவரத்தினத்திடம் தெரிவித்தார்.ஆனால் அதன் பின்னர் நவரத்தினடமிருந்து எந்த தகவலும் வரவில்லை.

இரத்தினசிங்கம், பற்குணம் கூட்டுறவு ஆணையாளராக வரவிரும்பும் விசயத்தை பலருக்கு தெரியப்படுத்தியதால் சில கூட்டுறவு சங்க தலைவரகள்.தெங்கு பனை உற்பத்தி கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்கள் பற்குணத்தின் வரவை விரும்பவில்லை.இதனால் இரு கூட்டுறவு சங்க நிர்வாகிகளும் அமிர்தலிங்கம்,நவரத்தினம் ஆகியோருக்கு அழுத்தம் கொடுத்தார்கள்.இதனால் பற்குணம் யாழ்ப்பாணம் வருவது தடுக்கப்பட்டது.

பற்குணத்தின் நோக்கம் கூட்டுறவை மேம்படுத்தி பனை வள உற்பத்தியைப் பெருக்குவதே.அதற்கு கூட்டுறவு ஆணையாளர் பதவி நல்லதென விரும்பினார்.ஊழல் பேர்வழிகளும் அரசியல்வாதிகளும் கை கொடுக்கவில்லை.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளில் பற்குணம் ஒருவரே கம்யூனிஸ்ட் களுடன் தொடர்புகளை பேணியவர்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)