(சாகரன்)
பொதுவாக புலம் பெயர் தேசங்களில் நடைபெறும் பொது அமைப்புகள் நடாத்தும் கொண்டாட்டங்கள் களியாட்டங்களுக்கு போகும் பழக்கங்களை கொண்டவன் அல்ல நான். காரணம் இவை பெரும்பாலும் புலிப்பினாமிகளால் நடாத்தப்படுபவை என்பதினால். மேலும் இவற்றின் முழுநோக்கமூம் உண்டியல் குலுக்கி இதில் சேரும் பணத்தை ஆயுதம் வாங்க இதனைப் பயன்படுத்துவதும் அன்றேல் தேசியத்தை கூறிக்கொண்டு தனிநபர்கள் அல்லது தமது கட்டுப்பாட்டில் மட்டும் உள்ள தனி நிறுவனங்களில் கணக்கில் இவற்றை வைப்பிலிடுவதும் ஆகும். இதனை நடாத்துபவர்கள் தமது வாழ்நாள் சாதனையாக வேலை செய்யாமல் வாழுவதை உறுதிப்படுத்தவுமே இந்த கலக்ஷன் பெரும்பாலும் பாவிக்கப்படுவதும் காரணம் ஆகும். இதற்கு அவர்கள் பாவிக்கும் சொற்பதங்கள் தமிழர்களின் கலை கலாச்சாரங்களை பேணிப்பாதுகாக்க விழா எடுக்கின்றோம்; அல்லது தமிழரின் அடையாளங்களை நிலை நிறுத்துகின்றோம் என்று தம்மை மீட்போராக காட்டுவதும் அல்லது தேசியம் என்று இதன் அர்த்தம் விளங்காமல் பாவிப்பதும்; ஆகும்.
தேசியத் தலைவரின் அவசர நிதி என்று அன்றைய கால கட்டத்தில் நடைபெற்ற தாக்குதலைக் காரணம் காட்டி கலக்ஷன் செய்வது 2009 யுத்தம் முடிந்த பின்பு சற்று தொய்வடைந்துள்ளது. ஆனாலும் ஆயுதம் வாங்க என்று அனுப்பப்படும் பணம் நின்று போனதாலும் மேலும் கணக்கு கேட்க வன்னிக்கு கூப்பிட்டு வெருட்டும் நிலை இல்லாமல் போனதாலும் வருவாய் குறைவாக இருந்தாலும் பணம் பட்டுவாடா(கொடுத்தல்) குறைவாக இருப்பதினால் நிகர லாபமாக வசூலிக்கும் முழு பணமும் சம்மந்தப்பட்டவர்களின் மடியினுள் சென்று விடுகின்றது.
இந்த கொண்டாட்டங்களை களியாட்டங்களை நடத்துபவர்களைப் பாரத்தால் யாரும் புலம் பெயர் தேசத்திற்கு வந்து தனிக் கூலிகளாக (மேற்கத்திய நாடுகளில் 95 வீதமான தொளிலாளர்கள் தினக் கூலிகளாகவே வேலை செய்கின்றனர்) வேலை செய்தவர்களாக இருக்க மாட்டார்கள் மாறாக ஏதாவது ஒரு வியாபாரம் செய்வதாக ஒரு அறிமுக அட்டை மாத்திரம் வைத்திருப்பர். இதன் நிறைவேற்று அதிகாரி என்று தமது பெயர்களுக்கு கீழ் போட்டு உலகில் எந்தப் பல்கலைக் கழகத்திலும் இல்லாத பட்டங்களையும் போட்டிருப்பர். எமது மக்களும் இவர்களின் பின்னணி அல்லது இதில் திரட்டப்படும் பணம் எனனவாகின்றது என்பதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ஏதோ தென் இந்திய கலைஞர்களின் கலைச் சேவையில் புழகாங்கிதம் அடைந்து இவர்களுக்கு அருகில் நின்று படம் எடுத்து தாம் பிறந்ததன் பிறவிப் பயனை அடைந்ததாக முகப்பு புத்தகத்தில் வெளியட்டு ‘லைக்’ஐ வாங்கிவிட்டு மீண்டும் இரண்டு வேலையடிக்க போய்விடுவார்கள்.
இப்படியான ஒரு நிகழ்விற்கு கடந்த வார இறுதியில் நானும் இழுத்து வரப்பட்டேன் தமிழர்களின் சாப்பாட்டுக் கடைகள் குளிபானக்கடைகள் என்று எம்மவர்கள் தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களை கொத்து ரொட்டி, அப்பம், ஐஸ்கிறீம், இளநீர் என்று கலக்க கடைகளுக்கும் வன்னி, யாழ்ப்பாணம், கிழக்கு என்று யுத்தத்தை நினைவூட்டும் பெயர்களை வைத்து மக்களை சுண்டிழுக்க மக்களும் அவியாத பாலப்பம், வெறும் மா ரொட்டியில் கொத்திய கொத்து ரொட்டி என்றும் வழமையாக விற்கும் விலையை விட அதிக விலையில் சனத்திடம் இருந்து பணத்தை புடுங்கி (இப்படித்தான் சாப்பாடு வாங்கும் போது கடைக்காரர்கள் செய்தார்கள்) கல்லில் போடட் சூட்டுடன் சனத்திடம் தள்ளிவிட்டனர். இதில் கொடுத்த காசிற்கு மிச்சம் வாங்கமுடியாத நிலை. 20 டாலர் கொடுத்தால் 10 டாலர் கொடுத்ததாக சண்டை வேறு. ஒரு நாள் போனவர்களில் பலர் மறு நாள் போவதா இரந்தும் வயிற்றுக் கொளாறு தொல்லை கொடுக்க கொண்டாட்டங்களை தவிர்தவர்கள் பலர் என்று இது வேறு. மேற்குல சுகாதார அதிகாரிகளின் கண்களில் இவை விழவில்லையோ என்ற எனது கேள்விகளுக்கும் பதிலும் இல்லை. இவ் உணவுகளில் எமக்கான அடையாளங்களும் இல்லை…..? பாரம்பரியங்களும் இல்லை…..? சுவையும் இல்லை….? தரமும் இல்லை…..?
இதில் வேறு….. வீதியில் கண்ட எனது நண்பரிடம் கேட்டேன் இந்த தெரு விழாவின் நோக்கம் என்ன என்று ‘இது தமிழரின் திமிரைக் காட்டும் செயற்பாடு’ என்ற குறப்பிட்டார். இது போன்ற நிகழ்வுகளினால் பணம் பண்ணுபவர்களின் திமிர் என்னவே மேலோங்கியே நிற்கின்றது ஆனால் சாதாரண பாமர மக்களின் திமிர் நாணயக் கயிறு போட்ட எருதுபோல் என்னவோ அடங்கியேதான் இருக்கின்றது.
இவ்வளவையும் நேரில் கண்ட சனம் இன்னமும் இவற்றை பகுத்தாய்வு செய்து தம்மை மாற்றிக் கொள்வதற்கு பதிலாக இன்னொரு வார விடுமுறை ‘கொண்டாட்டம்’ இற்காக’ ‘ஸ்ரார் நைற் இற்காக அடுத்த கிழமைக்கும் தமது சில நூறு டாலர்களை செலவு செய்ய மீண்டும் தினக் கூலி வேலைக்கு ஓடிக் கொண்டு இருக்கின்றது. இந்த சீத்துவாத்தில் தாயகத்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை வேட்டி கட்டி மேடை ஏற்றி பிரதேச அபிவிருத்தி என்று மக்களை ஏமாற்ற இவரை பயன்படுத்தியதாக என்னால் உணரப்படுகின்றது. முன்னாள் போராளி அமைப்புக்களின் எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களே(இவர்களிடன் கொஞ்சம் எனக்கு இருக்கும் நம்பிக்கைகளின் அடிப்படயில்) மக்களுக்கு ஏதாவது நல்ல விடயங்களைச் ஊரில் நிற்று செய்யுங்கள் இந்த காசு சேர்க்கும் கூட்டத்திற்கு நீங்களும் துணை போகாதீர்கள்.
(செப்ரம்பர் 01, 2016)
(Saakaran)
ஒரு முகநூல் நண்பர் குறிப்பிட்டு இருந்தார் எம்மவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு உணவின் பெயர் மிதி வெடி. றோல்ஸ் இன் பெரியண்ணா என்று இதனை நாம் அழைக்கலாம். போரினால் இந்த மனித குலம் அடைந்த துன்பங்கள் அளவிட முடியாதது….? அதுவும் மிதிவெடியால் அடைந்தஇ அடைந்து கொண்டிருக்கும் துன்பங்கள் இன்னும் அதிகம். அகற்றி முடிக்க முடியாத கொலை விதைகள் மிதி வெடிகள். போரை வெறுக்கும் மனித இயல்பை மறுக்கும் ஒரு அறிமுகம் என்று இதனை நாம் பார்க்க வேண்டும். பெயர்கள் சூட்டுவதிலும் ஒருவகை மனநிலை சார்ந்த பிரச்சனை இருப்பதாகவே நான் பார்க்கின்றேன்.