மலையக நண்பர்களின் 2வது ஒன்றுக்கூடல்

 

தேனீருக்கும் நமக்குமான இந்த ஆத்மார்த்தமான உறவின் அடிநாதமான தேயிலை தோட்டங்கள் எப்படி உருவாகின ??  தினம் தினம் குழவி கொட்டுக்கும் அட்டை கடிக்கும் முதலாளிகளின் சுரண்டலுக்கும் இறையாகி கொண்டிருக்கும் தோட்ட தொழிலாளர்கள் யார் ??? எமது வரலாற்றின் பக்கங்கள் துயர் நிறைந்த சிவப்புத் தேயிலைச் சாயத்தில் எழுதப்பட்டவை.

மலைகளில் படிந்த பனி தினமும் எமது தலைமுறைகளின் காற்தடங்களை தழுவிக் கொண்டிருக்கிறது , எதிரொலிக்கும் காற்றில் அவர்களின் கதைகள்இன்னமும் இரைந்துகொண்டிருக்கிறது. அந்தக் கதைகள் எங்களுக்காய் எஞ்சியிருக்கும் கதைகள் .
நாம் யார் என்பதற்கான கதைகள் . அவற்றை அறிந்து கொள்ள எதிர்வரும் 16ம் திகதி லவர்ஸ்லிப் தோட்டம் நுவரெலியாவில் சந்திப்போம் தோழர்களே !