இயக்கத் தேவைகளுக்காக புளொட் அமைபின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் மண் வியாபாரம் செய்து கொண்டிருந்தனா. புலிகளும் மண் வியாபாரம் செய்தனர். புளொட் அமைப்பின் யாழ்.மாவட்ட முக்கியஸ்தர் ரவிமூர்த்தியும், இன்னொரு உறுப்பினரும் அரியாலைக்கு மண் அள்ளச் சென்றனர். அப்போது அங்கு அங்கு வந்தார் ரிச்சார்ட். “நாம் மட்டுமே இதனை எடுக்கமுடியும்” நீங்கள் வேறெங்காவது சென்று பாருங்கள்” என்றார் ரிசார்ட். ரவிமூர்த்தி கேட்கவில்லை. பிரச்சனைப்பட்டார். ரிச்சார்ட்டுக்கு பொறுக்கவில்லை. பிஸ்டலை எடுத்து ரவிமூர்த்தியை சுட்டு விட்டார்.மற்றொரு புளொட் உறுப்பினரையும் சுட்டார். இருவரும் அதே இடத்தில் கொலை செய்யப்பட்டனர். பின்பு 2009 மே மாதத்தின்பின்பு மண் கொள்ளையில் புலிகளின் விண்ணன் என்பவர் ஈபிடிபி இன் மகேஸ்வரி நிதியத்திற்காக மண் கொள்ளையில் ஈடுபட்டார். இலங்கைத் தமிழ் மக்களின் மண்ணைக் கொள்ளை செய்வதில் பேரினவாத அரசுகள் தொடர்ந்தும் ஈடுபட்டும் வருகின்றனர். இதனை எதிர்த்து மூர்கத்தனமாக போராடிய விடுதலை அமைப்புக்களே பின்பு மண் கொள்ளையிலும் ஈடுபட்டனர்.எனவே மண் கொள்ளை என்பது ஒரு தொடர் கதை.