(சனிக்கிழமை சம்பவம்.)
இப்படி ஒருவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து மோட்டார் சைக்கிள் டயரை கழுத்தில் மாட்டி மண்ணெண்னை ஊற்றி உயிருடன் எரித்ததை எனது சிறுவயதில் பார்க்க நேர்ந்தது. கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஒரு சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இந்த கொடூரம் நிகழ்தப்பட்டது. ஏன்? எதற்காக? யார் எரித்தார்கள்? என்பது எனக்கு அவ்வளவாக அப்போது விளங்கவில்லை. ஆனால் பின்னாளில் எனக்கு நன்றாகவே புரிந்தது.
மூனறு வருடங்கள் பின் சரியாக அதேநாளில் அதே மின்கம்பத்தில் ஒருவர் கட்டப்பட்டிருந்தார் நேரம் பின்னேரம் 3.00 மணியிருக்கும். இம்முறை அவர் கழுத்தில் டயர் மாட்டப்பட்டிருக்கவில்லை ஆனால் நொடிப்பொழுதில் அந்தாள் மிக கொடூரமாக கொல்லப்பட்டார்.
அவரின் கால்களுக்கு கீழே கையெறிகுண்டு வீசப்பட்டது.
பெளதீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் நியூட்டனின் மூன்றாம் விதி உண்டு என அந்த சனிக்கிழமை நிரூபித்தது.
வேடிக்கை என்னவென்றால் முன்னையவரை உயிருடன் எரியூட்டியவர்தான் பின்னாளில் இப்படி கோரமாக கொல்லப்பட்ட நபர்.
( இந்த இரண்டாவது சம்பவம் M.R.நாராயனசுவாமியினால் அவரது Tigers of Lanka நூலில் கூறப்பட்டுள்ளது 172வது பக்கம் என நினக்கின்றேன். சரியாக ஞாபகம் இல்லை. இந்த சம்பவத்தை அந்த இந்திய பத்திரிக்கையாளர் குறிப்பிட காரணம் அது நடந்த இடத்தில் இருந்து சுமார் 50M தூரத்திலேயே இந்திய இராணுவத்தினரின் காவலரன் ஒன்று இருந்ததால் அதில் அப்பொழுது இருந்த யாரோ ஒருவர் இதனை நாராயணசுவாமிக்கு கூறியிருக்கலாம். அலலது அவரே அதற்குள் இருந்திருக்கலாம்.)
விடையத்துக்கு வருவோம்
முன்னைய சம்பவத்தில்:
கொல்லப்பட்டவர்- டெலோ இயக்கத்தவர்
கொலை செய்தவர்கள்- புலிகள்
காரணம் – டெலோ இயக்கத்தினரை சமூகவிரோதிகளாக புலிகள் கருதியமை.
இரண்டாவது சம்பவத்தில்:
கொல்லப்பட்டவர்- புலிகள் இயக்கத்தவர்
கொலை செய்தவர்கள்-டெலோ இயக்கத்தினர்
காரணம் – புலிகள் இயக்கத்தினரை பயங்கரவாதிகளாக டெலோ கருதியமை. முன்னைய சம்பவத்துக்கு பழிவாங்கல்.
நிற்க:
சிங்கள காடையர்களால் கொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழர்களைவிட அதிகளவில் தமிழரர்கள் தமிழ் காடையர்களாலேயே கொல்லப்பட்டுள்ளனர் என்கின்ற ஒரு சுடும் உண்மை ஒன்று இங்கே இலங்கை வரலாற்றில் உள்ளது.
இப்படியொரு “சனிக்கிழமை சம்பவம்” இன்னும் ஒன்று உள்ளது. விரைவில் கூறுகின்றேன்.
( இந்த படம் Rahu Kathiravelu வின் பக்கதில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த முதலாவது நபர்தான் இவரா என்பது தெரியவில்லை)
(Rajh Selvapathi)