தை 14ம் திகதி 2017, கனடாவில் மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இணைநகர(மார்க்கம் & முல்லைத்தீவு) கையப்பம் இடும் விழாவில் கலந்து கொண்ட வடமாகாண முதல்வர் சீவி விக்கினேஸ்வரன் மற்றும் நிர்மலன் கார்த்திஜேசு(Jr சுமந்திரன்) குழுவினரும்.
அந்த நாள் அதே நேரத்தில், 100 மீற்றர் இடைவெளியில் அமைந்துள்ள நட்ச்சத்திர Hilton விடுதியில் கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இராப்போசன விருந்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா(முல்லைதீவு), வடமாகாண அமைச்சர் Dr. சத்தியலிங்கம், திரு சிறிநேசன் ஞானமுத்து (மட்டக்களப்பு), கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, வடமாகாண கல்வி அமைச்சர் ரி. குருகுலராசா, வடமாகாண சபை உ றுப்பினர்கள் அஸ்வின் அயூப், இமனுவேல் ஆர்னோல்ட், டொக்ரர் குணசீலன் ஞானசீலன் மற்றும் வட மாகாணசபை நிர்வாக செயலாளர்கள் பங்கு பெற்றார்கள்.
எம் உறவுகளே, ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள், இவர்கள் செய்யும் தனிப்பட்ட அரசியல் கோமாளித்தனத்தால் எம் இனத்திற்கு எந்த விடிவும் வரப் போவதில்லை. இந்த கோமாளிகளை நம்பியா எம் தேசியத் தலைவனும், பல ஆயிரம் போராளிகளும் மற்றும் லட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் தங்கள் உயிர்களை அர்பணித்தார்கள் எம் இன விடுதலைக்காக !
இணைநகர கையெப்ப விழாவிற்கு, ஏன் முல்லைத்தீவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா செல்லவில்லை ?
முதல்வர் சீவி விக்கினேஸ்வரனின் தலைமையில் இயங்கும் வடமாகாண சபையின் கல்வி அமைச்சர் ரி. குருகுலராசா, வடமாகாண அமைச்சர் Dr. சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஏன் இணைநகர கையெப்ப விழாவிற்கு செல்லவில்லை ?
போகாதவர்களை, முதல்வரின் நிகழ்வை ஏற்பாடு செய்த கனடா உலகத்தமிழர்(WTM) அமைப்பினர் புறக்கணித்தார்களா அல்லது சம்மந்தர் அவர்களின் கோபத்திற்கு தாங்கள், ஏன் அரசியல் பலியாக வேண்டுமென்று நினைத்தார்களோ ?
அல்லது முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்களான கனடாவிலும் மற்றும் இலங்கையிலும் தடைசெய்யப்பட்ட கனடா உலகத்தமிழர்(WTM) அமைப்பு முதல்வரின் விழாவை ஏற்பாடு செய்தார்கள் என்பதை இவர்கள் தெரிந்து கொண்டார்களா ?
இந்த இணைநகரத் திட்டத்தை ஏற்பாடு செய்த மார்க்கம் நகரசபை உறுப்பினர் லோகன் கணபதியை அவமானப்படுத்திய கனடா உலகத்தமிழர்(WTM) அமைப்பு. லோகன் அவர்கள் சுயமாக தன் முடிவை எடுத்திருந்தால், இலங்கையில் இருந்து வந்த மற்றைய உறுப்பினர்களையும் அழைத்திருப்பாரா ?
ஆனால், ஈழ அரசியல் கோமாளிகள் எப்பொழுதும் மக்களை ஏமாற்றுவதற்காக தாங்கள் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் நின்று தமிழர்களின் விடுதலையை பெறுவதற்கு அரசியல் செய்கின்றோமென்று மேடையேறி பிரச்சாரம் செய்கின்றார்கள். எம் உறவுகளே, இவர்களை நம்பி நாம் என்ன செய்ய முடியும். இதில் நிரந்தரமாக வெல்பவன் சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமே !
(Eelamani Karikalan)