1. சல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகமெங்கும் மோட்டார் சைக்கிளிலில் பயணம் மேற்கொண்ட திரு. மகேஸ்வரி அவர்கள் அலங்காநல்லூருக்கு சென்று சேர்ந்தது போராட்டத்திற்கான உந்துவிசையாக அமைந்திருக்கிறது.
2. சல்லிக்கட்டு காளைகளையே பார்த்திராத ஊட்டி, சென்னை பல்லாவரம் போன்ற இடங்களில் இருந்தும், தர்மபுரி, ஆம்பூர், என்று பல்வேறு இடங்களில் இருந்தும் தனித்தனியாகவும் கூட்டாகவும் இளைஞர்கள் மதுரை வந்து சேர்ந்து, அலங்காநல்லூரை தேடி அலைந்து சேர்ந்திருக்கின்றனர். இத்தகைய இளைஞர்கள் அனைவருக்கும் சல்லிக்கட்டு தமிழர் பண்பாட்டு அடையாளமாக கருத்துருவேயிருக்கிறது.
3. நேரம் செல்லச் செல்ல ஏறத்தாழ 800 வாகனங்கள் ஒருங்குகூடி அலங்காநல்லூரை நோக்கி பயணித்திருக்கின்றனர்.
4. கூடிய இளைஞர்கள் பெரும்பாலும் 16 – 20 வயதே நிரம்பிய இளம் வயதினர்.
5. சீமான், சரத்குமார், “தேவர் குலத் திலகம்” கருணாஸ் உட்பட எவரையும் 10 நிமிடங்களுக்கு மேலாக இளைஞர்கள் பேசவிடவில்லை. “போதும். போய் உமது வேலையை பாருங்கள்” என்று கூறி மேடையை விட்டு விலகச் சொல்லியிருக்கிறார்கள்.
6. சிபிஎம் ஆட்கள் “மத்திய அரசே, மாநில அரசே” என்று கோஷம்போட ஆரம்பித்ததும், சல்லிக்கட்டு தவிர்த்து வேறு எதையும் பேச வேண்டாம் என்று அடக்கியிருக்கிறார்கள் 🙂
7. பெண்களே இப்போராட்டம் வலுப்பெற்றதற்கான ஆதார சக்தியாக இருந்திருக்கின்றனர்.
மேலும் பல சுவாரசியமான விடயங்களை நண்பர் பகிர்ந்ததில் இருந்து உணர முடிந்தது. நேரில் சென்று காண விருப்புண்டு. முயற்சி செய்கிறேன்.
சனிக்கிழமை மாலை இரண்டு பெக்கை ஏற்றிக் கொண்டு (அதில் எனக்கு எந்த மறுப்போ வெறுப்போ கிடையாது) ஃபெமினிசம் பேசும் மாமிகள் மற்றும் பிற ஆதிக்க சாதியில் பிறந்த பெண்ணிய சவடால் “போராளிகள்” எவரும் இப்போராட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கமாட்டார்கள். இந்நேரம், சல்லிக்கட்டின் “சாதியம்” குறித்து அரைவேக்காட்டு அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள் என்று தலையிலடித்து சத்தியம் செய்கிறேன்.
(Valar Mathi)