(சுகு-ஸ்ரீதரன்)
உள்ளூராட்சிசபைகளில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மக்கள் பணிசெய்வதற்குஅனைத்துதமிழ் தரப்புக்களும் முயல வேண்டும். இந்தசபைகள் அரசியல் வேறுபாடுகள் முரண்பாடுகளுக்sritharan sukuகான களங்கள் அல்ல. வட்டார பிரதேச- நகர- மாநகரமட்டங்களில் மக்களின் ஜீவாதார நலன்களுடன் தொடர்புபட்டவை. கடந்தஉள்ளு+ராட்சி சபைகள் போல கிழக்கு,வடக்கு மாகாணசபைகள் போல் குறிப்பிடத் தகுந்த எதையும் சாதிக்கமுடியாததாக இச்சபைகள் ஆகிவிடக் கூடாது.
“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு”என்றுபேரறிஞர் அண்ணா கூறியதுபோல் எல்லாஅரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்களிலும் நேர்மையானவர்கள் மனச்சாட்சி உள்ளவர்கள் கூடக்குறைய இருப்பார்கள். ஊழல் அற்ற, அர்ப்பணிப்பான சேவையை எமது மக்களுக்கு வழங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்க முடியும்.
எம்முள் நிலவும் கோஸ்டி மனப்பான்மைகள் எமது சமூக அவலம் அதிகரித்து செல்வதற்கு வழிவகுத்தன என்பது ஜீரணிக்க முடியாத உண்மை. செய்வதைவிட பேசுவது அதிகம் .இந்தநிலையில் மாற்றம் வேண்டும். குடிநீர்- சுகாதாரம் -சுற்றாடல் -சிறார் கல்வி- உடல் உளஆரோக்கியம் பாதைகள் -மின்சாரம் -சிறு சுய தொழில்கள் -சனசமூகநிலையங்கள்– வாசிகசாலைகள-; விளையாட்டுகழகங்கள ;என ஏராளமான விடயங்கள்.
இன்று உலகிளாவிய அளவில் ஏற்பட்டுவரும் சூழலியல் -குடிநீர் சவால்களை நோக்கினால் எமது ஊர்கள் இன்னும் மோசமாக பழுதுபடவில்லை. வெறிச்சோடிவிடாமல் ஊர்களில் மக்கள் வாழ்வதற்கான நிபந்தனைகள் உருவாக்கப்படவேண்டும்.
கால- சூழல் சவால்களுக்கேற்ப உள்ள+ராட்சியின் செயல்பரப்பும்-பொறுப்பும் அதிகரிக்கவேண்டும்இங்கு வேற்றுமையில் ஒற்றுமைகண்டு செயற்படுவது-தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எமது மக்களின் அடிப்படையான பல்வேறுவிடயங்களிலும் இணைந்து செயற்படுவதற்கான திறவுகோலாக அமையலாம். மக்களும் உள்ள+ராட்சி சபைகளில் பரஸ்பரம் அனுசரித்து இணைந்து செயற்படுமாறே ஆணை வழங்கியுள்ளளனர்.
இங்கிருந்துதொடங்குவோம்!
சுகு-ஸ்ரீதரன்
தலைவர்
தமிழர் சமூக ஜனநாயககட்சி