’கன்சைட்’ முகாம் படுகொலை முன்னாள் கடற்படை வீராங்கனைகள் இருவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை கடற்படைத் தளத்தின் இரகசிய சித்திரவதை முகாமெனக் கூறப்படும் ‘கன்சைட்’ முகாமில் வைத்து, பாலையூற்றுப் பிரதேசத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட இரு பெண்களின் கொலை தொடர்பில், ஞாயிற்றுக்கிழமை (20) கொழும்பில் கைது செய்யப்பட்டு,   திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் திங்கட்கிழமை (21) முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் கடற்படை வீராங்கனைகள் இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.